ரூ.19,100 க்கு இப்படி ஒரு ஸ்மார்ட்போன் கிடைச்சா.. கசக்குமா என்ன?

விவோ நிறுவனம் ஒரு புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த வேலைகளில் ஈடுபடுவதாகவும், அது விவோ Y70 மாடலாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. இப்போது அதை உறுதி செய்யும்படி, பிரபல டிப்ஸ்டர் ஒருவர் கூறப்படும் விவோ Y70 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தி உள்ளார்.
சீன மைக்ரோ பிளாக்கிங் தளமான வெய்போவின் வழியாக தகவல்களை பகிர்ந்துகொண்ட பிரபல டிப்ஸ்டரின் கூற்றுப்படி, வதந்திக்கப்படும் விவோ ஸ்மார்ட்போன் ஆனது இந்த ஆண்டு மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ ஒய்70எஸ் மாடலுடன் கிட்டத்தட்ட ஒத்திருக்கும்.
வரவிருக்கும் விவோ ஒய்70 ஸ்மார்ட்போன் ஆனது சாம்சங்கின் எக்ஸினோஸ் 880 SoC ப்ராசஸர், ட்ரிபிள் ரியர் கேமராக்கள் மற்றும் 4,500 எம்ஏஎச் பேட்டரி போன்ற பிரதான அம்சங்களை கொண்டிருக்கும். சீன தொழில்நுட்ப நிறுவனமான விவோ இந்த ஸ்மார்ட்போனின் வளர்ச்சியை இன்னும் உறுதிப்படுத்தவில்லை, எனவே இதன் அம்சங்கள் மற்றும் விலை சார்ந்த தகவல்களை ஒரு சிட்டிகை உப்பில் இருந்து கிள்ளிக்கொள்ளும் அளவு மட்டுமே எடுத்துக்கொள்வது நல்லது.

விவோ ஒய்70 ஸ்மார்ட்போனின் (எதிர்பார்க்கப்படும்) விலை:

விவோ ஒய் 70 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 128 ஜிபி சேமிப்பு மாடலானது இந்தியாவில் தோராயமாக ரூ.19,100 க்கு அறிமுகமாகலாம் என்று கூறப்படுகிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடலானது தோராயமாக ரூ.21,200 என்கிற விலைக் குறியீட்டைக் கொண்டிருக்கும்.
சீனாவில் வாங்க கிடைக்கும் விவோ ஒய் 70 எஸ் ஸ்மார்ட்போனின் அடிப்படை 6 ஜிபி + 128 ஜிபி மாடலானது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.21,200 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் 8 ஜிபி + 128 ஜிபி மாறுபாட்டின் விலை தோராயமாக ரூ .23,300 ஆகும்.

விவோ ஒய்70 ஸ்மார்ட்போனின் (எதிர்பார்க்கப்படும்) அம்சங்கள்:

டிப்ஸ்டரின் கூற்றுப்படி, விவோ ஒய் 70 ஸ்மார்ட்போனில் 1080 x 2340 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட எல்சிடி டிஸ்ப்ளே இடம்பெறும். இது ஆக்டா கோர் எக்ஸினோஸ் 880 SoC உடனாக 8 ஜிபி வரையிலான ரேம் மூலம் இயக்கப்படுகிறது

விவோ ஒய் 70 எஸ் மாடலில் இருப்பது போலவே, விவோ ஒய் 70 ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமரா அமைப்பு இடம்பெறும். அதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம்.
இருப்பினும், விவோ ஒய் 70 எஸ் ஸ்மார்ட்போனில் காணப்பட்ட 16 மெகாபிக்சல் செல்பீ கேமராவிற்கு பதிலாக இதில் 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா இடம்பெறலாம்.

இந்த விவோ ஸ்மார்ட்போன் ஒரு 4,500 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் வழியாக 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கு ஆதரவு அளிக்கலாம்.

தவிர இதில் 5ஜி இணைப்பு, என்எப்சி ஆதரவு மற்றும் 128 ஜிபி அளவிலான உள் சேமிப்பு போன்ற மற்ற அம்சங்களையும் நாம் எதிர்பார்க்கலாம். தற்போது வரையிலாக இதன் இன்டர்னல் ஸ்டோரேஜ் விரிவாக்க முடியுமா என்பதில்தெளிவு இல்லை.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே