தனது மனைவி வேறு ஒரு ஆணுடன் படுக்கையில் இருக்கும் வீடியோவை ஆதாரமாக காட்டி கணவர் விவாகரத்து பெற்றுள்ள சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதியைச் சேர்ந்த நபருக்கு கடந்த 1991-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில், 2008-ம் ஆண்டு பெங்களூருக்கு பயணம் செய்த அந்த நபர், தனது படுக்கை அறையில் வீடியோ கேமராவை பொருத்தியுள்ளார்.
பயணம் முடிந்து வீட்டுக்கு வந்த கணவருக்கு அதிர்ச்சி காத்திருந்ததுள்ளது.
கேமரா பதிவை டிவிடியாக மாற்றிப் பார்த்ததில் தனது மனைவி படுக்கையில் அவரின் ஆண் நண்பருடன் ஒன்றாக இருந்தது பதிவாகியுள்ளது.
இதனை அடுத்து பெல்லாரி நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி கணவர் வழக்கு தொடர்ந்து விவாகரத்தும் பெற்றார்.
மனைவி ஆண் நண்பருடன் படுக்கையில் இருந்த டிவிடியையும் அவர் ஆதாரமாக சமர்ப்பித்திருந்தார்.
பெல்லாரி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 2013-ம் ஆண்டு மனைவி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில் தனது கணவர் ஆபாசப்படங்களை படம் பிடிக்கும் ஆர்வம் உடையவர் என்றும், அவர் தன்னை கட்டாயப்படுத்தியதால் வேறு ஒரு ஆணுடன் இருப்பது போல நடித்தேன் என்றும் குறிப்பிட்டு விவாகரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரினார்.
இந்த நிலையில் விவாகரத்து வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம் கணவர் ஆபாசப்படங்களில் நடிக்க கட்டாயப்படுத்துவதாக கூறும் மனைவி அதுபற்றி ஏன் புகார் அளிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியது.
மேலும் பெல்லாரி நீதிமன்றம் வழங்கிய விவாகரத்தையும் நீதிபதிகள் உறுதி செய்தனர்.