வேளாண்மை, உள்கட்டமைப்பு உள்ளிட்ட 10 துறைகளில் தமிழகம் முதலிடம் – முதல்வர் பழனிசாமி

வேளாண்மை, தொழில் உள்கட்டமைப்பு, மனிதவள மேம்பாடு உள்ளிட்ட 10 துறைகளில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் 125-வது ஆண்டின் துவக்க விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டார்.

இவ்விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தொழில்துறையை ஊக்குவிக்க பச்சை வகைப்பாடு திட்டம் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தார். 

பல புதிய தொழில் திட்டங்கள் மூலம் தமிழகம், தொழில் வளர்ச்சியில் முன்னிலை வகித்து வருவதாகவும், வேளாண்மை, சமூகநலத்துறை, மனிதவள மேம்பாடு என 10 துறைகளில் தமிழகம் முதலிடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழக அரசின் நடவடிக்கையால் தொழில் வளர்ச்சியில், இந்தியாவிலேயே தமிழகம் சிறந்து விளங்குகிறது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே