ஒரே நாளில் 80,000 BSNL ஊழியர்கள் விருப்ப ஓய்வு…!!

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 80,000-க்கும் மேற்பட்டோர் ஒய்வு பெறுகின்றனர்.

இந்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் நிதி நெருக்கடி காரணமாக, நிதிச்சுமையை குறைப்பதற்காக பணியாளர்களை குறைப்பது என மத்திய அரசு முடிவு செய்தது.

இதனையடுத்து அதில் பணிபுரியும் லட்சகணக்கான பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வு பெறும் திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தில் அந்நிறுவனத்தில் பணியாற்றும் பெரும்பாலானோர் சேர்ந்துள்ளனர். 

இதனையடுத்து, பிஎஸ்என்எல் ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் இன்று விருப்ப ஒய்வு பெறுகின்றனர்.

தமிழ்நாட்டில் மட்டும் 5,308 பேரும், நாடு முழுவதுமாக 78,569 பேர் ஒய்வு பெறுகின்றனர். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மொத்த ஊழியர்கள் 1,53,786 பேரில் 78,569 பேர் ஒய்வு பெறுவதால் 50% குறைவான ஊழியர்களே பணியை தொடர்கிறார்கள்.

நிதி நெருக்கடி, தொழில்போட்டி காரணமாக நஷ்டத்தில் இயங்கி வரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றிவரும் 50 வயது மற்றும் 50 வயதிற்கு மேற்பட்டோர் விருப்ப ஒய்வு பெறலாம் என அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து 10,000 க்கும் மேற்பட்டோர் ஒய்வு பெறுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • புதிய தொழில்நுட்பங்களுக்கு மாறாதது,
  • தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுடன் போட்டி போட முடியாதது,
  • தொடர்ந்து சரிவை சந்தித்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிஎஸ்என்எல் நிறுவனம் நிதிச்சுமையை சந்தித்தது.

நாடுமுழுவதும் வலுவான நெட்வொர்க்கை வைத்திருந்த பிஎஸ்என்எல் நிறுவனம் இந்நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது பலரையும் கவலையடையச் செய்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே