ஆறாம் கட்ட அகழ்வாய்வின் போது கீழடி பகுதி முழுவதையும் அகழாய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரியமேட்டில் தமிழ் கலை இலக்கிய பேரவை சார்பில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர் ராமகிருஷ்ணன் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தொல்லியல் துறை அகழாய்வுகள் அனைத்தும் வெளிப்படைத் தன்மையுடன் நடக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் கீழடி அருகே உள்ள சங்க கால புகைப்பட பகுதியாக விளங்கிய கொந்தகை பகுதியில் கிடைக்கும் எலும்புகளை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.