கேரளாவில் ஏற்கனவே ஒரு மாணவி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸால் அங்கு கிட்டத்தட்ட 400 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பல உலக நாடுகளில் அந்த வைரஸ் பரவி வருகிறது.
சீனாவில் படிக்கும் கேரள மாணவி நாடு திரும்பிய நிலையில், அவருக்கு வைரஸ் பாதிப்பு இரு தினங்களுக்கு முன் உறுதி செய்யப்பட்டது.
அவர் திருச்சூரில் உள்ள தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், மேலும் ஒருவருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சீனாவில் இருந்து திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.