தமிழகத்தை குட்டிச் சுவராக்கியது திராவிடம் – குருமூர்த்தி

தமிழகத்தின் கலாச்சாரத்தை கடந்த 70 ஆண்டுகளாக இரு திராவிட இயக்கங்களும் பாழ்படுத்திவிட்டதாக, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி விமர்சித்துள்ளார். 

மதுரையில் நடைபெற்ற துக்ளக் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் பேசிய அவர், திராவிட அரசியலை தமிழக மக்கள் புறக்கணிக்க தொடங்கிவிட்டனர் எனவும், திராவிடம் மறைந்து ஆன்மீகமாக மாறிகொண்டு இருக்கிறது எனவும் கூறினார்.  

தமிழகத்தை மாற்றிய பெருமை எம்ஜிஆருக்கு மட்டுமே உண்டு எனவும், அவர்தான் கோயிலுக்கு செல்கிறேன் என வெளிப்படையாக அறிவித்துவிட்டு சென்றதாக பாராட்டு தெரிவித்தார். 

திமுக, அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளும், தமிழகத்தின் கலாச்சாரத்தை அழித்துவிட்ட போதிலும், ஆன்மீக கலச்சாரம் மாறவில்லை என குறிப்பிட்ட குருமூர்த்தி, தேசிய அரசியலில் தலைமை தாங்கும் அளவுக்கு தமிழகத்தின் கலாச்சாரத்தை மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே