கோவை சிறுமியை மேலும் ஒருவர் வன்கொடுமை செய்தது சோதனையில் கண்டுபிடிப்பு..

கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 25-ஆம் தேதி கோவையில் 7 வயது சிறுமி காணாமல் போனார்.

அவரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் வீட்டிற்கு எதிரே இருந்த மறைவான இடத்தில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக சந்தோஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த கோவை மகிளா நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

இந்த நிலையில் சிறுமியின் தாய் நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.

சந்தோஷ்குமார் தவிர்த்து மேலும் ஒருவரும் தமது மகளை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தடயவியல் அறிக்கை மூலம் தெரிய வந்திருப்பதாக மனுவில் அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக பெண் அதிகாரி ஒருவரை நியமித்து வழக்கை மீண்டும் விசாரணை செய்ய வேண்டுமென சிறுமியின் தாய் கேட்டு கொண்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே