டெல்லி கலவரம் பற்றி அமித்ஷா மக்களவையில் விளக்கம்

டெல்லி கலவரம் வெறும் 36 மணி நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டதாக மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விவாதத்துக்கு பதில் அளித்த அவர், பிப்ரவரி 25க்குப் பிறகு கலவரங்கள் ஏதும் நிகழவில்லை என்றும், அரசியலாக்க முயற்சிகள் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

டெல்லியின் பிற பகுதிகளுக்கு கலவரம் பரவாமல் தடுத்ததாக போலீசாரை பாராட்டிய அவர், 700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 153 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

முதற்கட்ட விசாரணையில் கலவரம் திட்டமிட்டுத் தூண்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், வன்முறைக்கு நிதியுதவி செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வெறுப்பை தூண்டுவதற்காக பிப்ரவரி 22-ல் 60 சமூக வலைதளக் கணக்குகள் தொடங்கப்பட்டு 26-ஆம் தேதி முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், தொடர்புடையவர்கள் ஒருபோதும் சட்டத்தில் இருந்து தப்ப முடியாது என்று கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே