தமிழகம் வெற்றி நடை போடவில்லை… தத்தளிக்கிறது – டிடிவி தினகரன் கடும் தாக்கு..!!

தமிழகம் வெற்றி நடை போட வில்லை, கடன் சுமையில் தத்தளிக்கிறது என்று டிடிவி தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.

அதுமட்டுமன்றி தொகுதி பங்கீடு பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக ஒவ்வொரு கட்சியும் போட்டியிட்டுக் கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது.

அதில் மக்களை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில் தமிழகம் வெற்றி நடை போட வில்லை.கடன் சுமையில் தமிழ்நாடு தத்தளிக்கிறது என்று அமமுக பொது செயலாளர் டி டி வி தினகரன் கூறியுள்ளார்.

மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் அக்கட்சியின் வட்ட செயலாளர்கள் தான் போலீஸ் இன்ஸ்பெக்டர்களாக இருப்பார்கள் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் அமமுக கூட்டணிதான் வெற்றி கூட்டணி. எங்கள் கூட்டணியை கைநீட்டி யாராலும் குற்றம் சுமத்த முடியாது.

தமிழகத்தின் வாக்காளர்களை 2000 ரூபாய், 3000 ரூபாய் என பணம் கொடுத்து ஏமாற்றி விடலாம் என தவறாக எடை போடுகிறார்கள்.

அவ்வாறு நினைப்பவர்களுக்கு இந்த தேர்தலில் மக்கள் தக்க பாடம் கொடுப்பார்கள். ஐந்து முறை ஆட்சியில் இருந்த திமுக தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை.

மொத்தமாக சுரண்டி விட்டது. முதியோர் உதவித் தொகையைக் கூட நிதி நெருக்கடி எனக்கூறி விளங்காதவர்கள் தான் தற்போதைய ஆட்சியாளர்கள், தமிழகம் வெற்றி நடை போட வில்லை.

7 லட்சம் கோடி கடன் சுமையில் தமிழ்நாடு தத்தளிக்கிறது. டீக்கடை, பிரியாணி கடை மற்றும் பியூட்டி பார்லர் என்று திமுகவினர் அட்டகாசம் செய்து வருகிறார்கள்.

அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த நிலைமை தமிழகத்தில் நீடிக்கும். அனைவரும் ஆந்திராவிற்கு செல்வதைத் தவிர வேறு வழியில்லை.

தண்ணீரே இல்லாத நிலையில் வாஷிங் மெஷின் எதற்கு?.ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கி விடலாம் என அதிமுகவினர் போடும் கணக்கு தூள் தூளாக போகிறது.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் யாருக்கும் எந்த பயனும் இல்லை. அது எல்லாம் ஏமாற்று வேலை என்று டிடிவி தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே