பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரை..!!

மத்திய பாஜக அரசுடன் கூட்டணி வைத்துள்ளதால், தமிழகத்திற்கு பல வகைகளில் நன்மைகள் கிடைக்கும் என்று அரவக்குறிச்சி பிரசாரத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (மார்ச் 24) பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது, அண்ணாமலையை அரவக்குறிச்சி மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். தமிழகம் ஏற்றம் பெற பாஜகவும், பிரதமரும் பல ஆலோசனைகளை வழங்குகின்றனர்.

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் மாநிலத் திட்டங்களுக்குத் தேவையான நிதி கிடைக்கும்.

தமிழகத்தில் சாலைத்திட்டங்களுக்காக ஒரே கட்டமாக ஒரு லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது.

முதல்வராக இருப்பவருக்கு ஏற்படும் நெருக்கடிகளை சொல்லி ஸ்டாலின் அரசியல் செய்கிறார். காவிரி பிரச்சனைக்கு அதிமுக ஆட்சியில்தான் நிரந்தர தீர்வு எட்டப்பட்டது.

விவசாயிகளில் யார் போலியாக இருப்பார்? ஸ்டாலின் பதில் கூற வேண்டும். விவசாயிகளை ஸ்டாலின் கொச்சைப்படுத்தி பேசிவருகிறார்.

விவசாயியான நான் முதல்வராக இருப்பதால்தான் குடிமராமத்து பணிகளை துரிதப்படுத்தினேன். விவசாயத்திற்கு நீர் முக்கியம் என்பதால்தான் குடிமராமத்து பணிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டது

நீர் மேலாண்மைத் திட்டத்தில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது. அதிமுக அமைத்துள்ள கூட்டணி வெற்றிக் கூட்டணி என்று கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே