கடந்த கல்வி ஆண்டில் பிஹச்.டி முடித்தவர்கள் எண்ணிக்கையில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நடத்திய உயர்கல்வித்துறை குறித்த கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது.
இதன்படி 2018-2019 ஆம் கல்வி ஆண்டில் நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 5844 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
இரண்டாம் இடம் பிடித்துள்ள கர்நாடகாவில் 5020 பேரும், மூன்றாம் இடம் பிடித்துள்ள உத்தரபிரதேசத்தில் 3996 பேரும் முனைவர் பட்டங்களை பெற்றுள்ளனர்.
நான்காம் இடம் பிடித்துள்ள அசாமில் 3676 மாணவர்களும், ஐந்தாம் இடம் பிடித்துள்ள ஆந்திரப் பிரதேசத்தில் 2615 மாணவர்களும் கடந்த கல்வியாண்டில் பிஹச்.டி முடித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் பிஹச்.டி முடித்தவர்களில் ஆண்களைவிட பெண்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
2017-18 ஆம் கல்வியாண்டில் பிஹச்.டி முடித்தவர்களில் தமிழகம் முதலிடம் பிடித்த நிலையில், 2018-19 ஆம் கல்வி ஆண்டிலும் முதல் இடம் பிடித்திருப்பது, நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களில் 49 சதவீதம் பேர் தமிழக மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.