ரிஷிகேஷில் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பக்தர்கள்

ஆன்மீக பயணம் மேற்கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் ரிஷிகேஷில் இருக்கும் சுவாமி தயானந்தா ஆசிரமத்திற்குச் சென்றார்.

அப்போது அங்கிருந்த பக்தர்கள் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

தர்பார் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் 5 நாள் பயணமாக இமயமலைக்கு சென்றிருக்கிறார்.

நவம்பர் மாத இறுதியில் இமயமலைக்குச் செல்ல திட்டமிட்டிருந்த ரஜனி அதற்கு முன்னதாகவே ஆன்மீக பயணத்தை தொடங்கி விட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே