மார்ச் 31 வரை கல்லூரி, சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்

கல்லூரி, சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டு இருக்கிறது.

சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை 9000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இந்தியாவில் அனைத்து மாநில அரசுகளும் கரோனா வைரஸை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன.

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவியதை தொடர்ந்து இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஆசிரியர்கள் வரவேண்டும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மார்ச் 31ஆம் தேதி வரை கல்லூரி. சிபிஎஸ்சி ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே