ராதாபுரம் தேர்தல் தொடர்பான வழக்கை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

ராதாபுரம் தேர்தல் தொடர்பான வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நெல்லை ராதாபுரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தாக்கல் செய்த மனுவை விரைந்து விசாரிக்க கோரி திமுகவை சேர்ந்த அப்பாவு வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், முன்கூட்டியே விசாரிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மேலும் வழக்கு பட்டியலிடப்பட்ட பின்னரே விசாரிக்கப்படும் என கூறி அப்பாவுவின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே