தென்கொரியாவில் இருந்து தமிழகத்திற்கு 1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் 2000 ஆயிரத்தை தாண்டி அதிகரித்து தான் வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் 64,603 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 833 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தென்கொரியாவில் இருந்து மேலும் ஒரு 1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகத்திற்கு வந்துள்ளது.
மேலும் பரிசோதனை மேற்கொள்ள 6.77 லட்ச பிசிஆர் கருவிகள் கையில் இருப்பதாக தமிழக மருத்துவப் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.