குழந்தைக்கு 6 வயசாகும் வரை வறட்டு இருமல் வந்தா இந்த கைவைத்தியத்திலே சரி பண்ணிடலாமாம்!

வறட்டு இருமல் என்பதை சளி இருமலோடு ஒப்பிடவே முடியாது. சளியால் இருமல் வரும்போது அவை மூக்கில் இருக்கும் அடைப்பை வெளியேற்றும். ஆனால் வறட்டு இருமல் வந்தால் அவை சளியையும் வெளியேற்றாது. மாறாக தொண்டையில் எரிச்சல், நெஞ்சில் வலி, தொண்டப்புண் போன்றவற்றை உண்டாக்கும். பெரும்பாலும் இரவு நேரங்களில் தூங்கவே விடாத அளவுக்கு உபாதை தரக்கூடும்.
ஆறுமாத குழந்தைக்கு வறட்டு இருமல் உண்டாகும் போது என்னவெல்லாம் தீர்வு என்பது குறித்து பார்த்தோம். இப்போது வளரும் பிள்ளைகள் குறிப்பாக 6 வயதுக்குள் இருக்கும் பிள்ளைகளுக்கு வறட்டு இருமல் வந்தால் வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டே நிவாரணம் பெற்றுவிடமுடியும். அப்படி எந்த பொருள்களை பயன்படுத்தலாம் என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.
வறட்டு இருமல் எதனால் உண்டாகிறது என்பதை முதலில் அறிந்துகொள்வோம். சிலருக்கு சளி இருக்கும் போதும் வறட்டு இருமல் உண்டாகும். ஃப்ளூ வைரஸாக இருந்தாலும் வறட்டு இருமல் வரக்கூடும். இந்த வைரஸால் வரக்கூடிய இருமல் சில நாட்கள் உடலில் தங்கியிருந்து வலி ஏற்படுத்திய பிறகு தான் செல்லும். இன்னும் சிலருக்கும் க்ரூப் என்னும் வைரஸால் வரக்கூடும். இவை வழக்கத்தை விட அதிகமான அழுத்தமான தொடர் இருமலை கொடுக்கும்,இருமலின் போது சத்தம் மிகுந்திருக்கும். சுவாசப்பாதை வீக்கம் உண்டாகும். இவை எல்லாமே அதிகம் தாக்ககூடியவை.

சர்க்கரை நோயாளியின் புண்ணை முழுமையாக குணப்படுத்தும் மாசிக்காய்! எத்தனை பேருக்கு தெரியும்!

இவை தவிர பிள்ளைகளுக்கு வாசனை அலர்ஜி பிரச்சனை, புகை போன்றவையும் காரணமாக இருக்கலாம். வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டு வறட்டு இருமலை எப்படி போக்குவது என்பதை தெரிந்துகொள்வோம்.

​நீராவி பிடிக்க வைக்கலாம்
குழந்தைகளுக்கு ஆவி பிடிக்க வைக்க முடியாது. ஆனால் வளரும் பிள்ளைகள் ஓரளவு சூட்டை தாங்ககூடியவர்கள். எனினும் பெரியவர்களை போன்று பிடிக்க வேண்டியதில்லை. வெந்நீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் கல் உப்பு அதோடு சிறிதளவு யூகலிப்டஸ் தைலம் அல்லது இலைகளை சேர்த்து வாய்குறுகிய பாத்திரத்தில் வைத்து அறையின் நடுவில் வைக்க வேண்டும். பிறகு பாத்திரம் அருகில் ஒரு அடி அல்லது இரண்டு அடி தள்ளி பிள்ளையை அமர்த்திகொள்ளுங்கள். அறையில் ஃபேன் போட வேண்டாம்.

வெளிக்காற்று வருமளவு ஜன்னலையும் திறந்துவைக்காமல் மூடி வையுங்கள். இவை பிள்ளைகளின் சுவாசக்குழாய் வரை சென்று அடைப்பை நீக்கும். மூச்சு சீராக இருக்கும். வறட்டு இருமல் குறையதொடங்கும். தினமும் ஒருமுறை என ஐந்துநாட்கள் இப்படி செய்தால் போதும். ஒருவயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் முதல் இதை செய்யலாம். ஆனால் கவனமாக குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும்.

​பட்டையுடன் தேன்
மசாலா உணவுகளில் பயன்படுத்தும் பட்டை உண்மையில் அருமருந்து தரக்கூடியது என்று சொல்லலாம். வாசனைக்காக மட்டும் இதை உணவுகளில் சேர்ப்பதில்லை. பட்டை நுரையீரலில் இருக்கும் சளியை அகற்ற உதவுகிறது. நுரையீரலில் அடைப்பு இருப்பவர்கள் பட்டையை மற்ற வைத்திய பொருள்களுடன் பயன்படுத்தினால் வறட்டு இருமல் காணாமல் போகும். சளி, இருமலுக்கு நல்ல மருந்து பட்டை என்று சொல்லலாம்.

ஒருவயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு தேன் கலந்துகொடுக்கலாம். அரை டீஸ்பூன் பட்டைதூளை அரைடீஸ்பூன் அளவு தேனில் குழைத்து தினமும் இருவேளை கொடுத்துவந்தால் இருமல் சரியாகும்.

​பால், மஞ்சள், மிளகுப்பொடி
மஞ்சள் என்பது கிருமி நாசினி. ஆண்டி பாக்டீரியல் பண்புகளை கொண்டிருப்பதால் இவை எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும். சாதாரணமாகவே வாரம் ஒருமுறையாவது மஞ்சளை பாலில் கலந்து கொடூத்தாலே வளரும் பிள்ளைகளுக்கு எதிர்ப்புசக்தி அதிகமாக இருக்கும். வறட்டு இருமல் காலங்களில் மஞ்சள் இருமலை போக்கும்.

பிள்ளைகள் தூங்கும் போது இளஞ்சூடான பாலில் மஞ்சள் தூள் இரண்டு சிட்டிகையும், மிளகுத்தூள் சிட்டிகையும் கலந்து அந்த சூட்டிலேயே பிள்ளைகளை குடிக்க வையுங்கள். தொடர்ந்து ஒருவாரம் வரை கொடுத்தாலே போதுமானது. நிச்சயம் நிவாரணம் கிடைக்கும்.

சீரகதண்ணீர்
வறட்டு இருமலுக்கு இளஞ்சூடான வெந்நீரை காட்டிலும் சீரகம் வைத்த நீரை கொடுக்க வேண்டும். 2 லிட்டர் தண்ணீருக்கு ஒரு டீஸ்பூன் அளவு சீரகம் சேர்க்கவேண்டும். சீரகத்தை வெறும் வாணலியில் இலேசாக வறுத்து கொதிக்க வைத்த வெந்நீரில் கொட்டி ஆறவிடவும். பிள்ளைகளுக்கு வறட்டு இருமல் சரியாகும் வரை சீரக தண்ணீரை மட்டுமே கொடுக்க வேண்டும். நீரை மேலாக வடிகட்டியும் கொடுக்கலாம்.

​சூப் அவசியம்
பிள்ளைகளுக்கு வறட்டு இருமல் ஏற்பட்ட காலங்களில் இரவு தவிர்த்து மற்ற நேரங்களில் சத்துகஞ்சி, சத்து பானம், பால், டீ, காஃபி போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக காய்கறிகள் வேக வைத்து மிளகுத்தூள், புதினா, கொத்துமல்லி சேர்த்து இளஞ்சூட்டில் குழந்தைக்கு கொடுக்க வேண்டும். தினமும் ஒரு கப் அளவு கொடுக்க வேண்டும். அசைவம் பழகிய பிள்ளைகளுக்கு சிக்கன், மட்டன் சூப் கொடுக்கலாம். சூப் கொடுக்கும் போது ஒரு பூண்டு தட்டி போடுவதை மறக்க வேண்டாம்.

நலம் தரும் நந்தியாவட்டை மருத்துவ குணங்கள்!

மேற்கண்ட குறிப்புகள் எல்லாமே ஓரு வயது முதல் 6 வயது வரையிலான பிள்ளைகளுக்கு ஏற்ற சிறந்த வைத்தியம். அதோடு இவை எல்லாமே பக்க விளைவுகள் இல்லாத வைத்தியமும் கூட என்பதும் கவனிக்க வேண்டியதே. வறட்டு இருமல் ஆரம்ப நிலையே சரி செய்ய கூடியதே. ஆனால் பிள்ளைகள் மூச்சு விடுதலில் சிரமத்துக்கு உள்ளாகவில்லை என்றால் கண்டிப்பாக இந்த வைத்தியம் உதவும். வறட்டு இருமலோடு மூச்சுத்திணறலையும் பிள்ளைகள் கொண்டிருந்தால் மருத்துவரையும் அணுகுவது நல்லது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே