கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் குறித்து பிரதமர் ஆய்வு..!!

கொரோனா தடுப்பூசி மேம்பாட்டுப் பணிகள் தொடர்பான 3 நகரங்களுக்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அகமதாபாத் அருகே Zydus Biotech Park சென்று ZyCoV-D தடுப்பூசி குறித்து கேட்டறிந்தார்.

ஹைதராபாத்தை தலைமையகமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியை தயாரித்து, மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளது.

இதேபோல, அகமதாபாத்தின் Zydus Cadila நிறுவனத்தின் ZyCoV-D தடுப்பூசி இரண்டாம் கட்ட பரிசோதனையில் உள்ளது.

மூன்று கட்ட பரிசோதனைகளையும் முடித்த ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேக்கா தடுப்பூசியை, புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டியூட் நிறுவனம் இந்தியாவில் விநியோகிக்க ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த மூன்று நிறுவனங்களுக்கும் பிரதமர் மோடி சென்று, கொரோனா தடுப்பூசி தொடர்பான பணிகளை நேரில் ஆய்வு செய்வார் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அகமதாபாத் அருகே சைடஸ் பயோடெக் பார்க் சென்ற பிரதமர் மோடி, அங்கு கொரோனா தடுப்பூசி ஆய்வுப் பணிகள் குறித்து சம்மந்தப்பட்ட மருத்துவ வல்லுநர்களிடம் கேட்டறிந்தார்.

மருத்துவ கவச உடை அணிந்து, ஆய்வகம் மற்றும் மருந்து தயாரிக்கும் கூடங்களையும் பிரதமர் பார்வையிட்டார்.

புனே மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கும் சென்று, கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் தொடர்பாக பிரதமர் ஆய்வு செய்ய உள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே