செப்டம்பர் மாதம் நடக்கிறதா டி 20???

இந்த ஆண்டு ஆசிய கோப்பை நடைப்பெறுமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இந்த போட்டியை நடத்துவது தொடர்பான முடிவை இப்போது ஒத்திவைத்துள்ளது. இருப்பினும் இந்த போட்டியை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் இப்போது முன் வந்துள்ளது.

பாகிஸ்தானும் தங்கள் நாட்டில் போட்டியை நடத்த தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணி தலைவரான ஷமி சில்வா கூறியுள்ளார். இருப்பினும் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் இந்த ஆசிய கோப்பையை இலங்கை நடத்தலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், ஏ.சி.சி யும் ஒப்புக் கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு ஆசிய கோப்பை செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த ஆண்டு ஆசிய கோப்பை நடத்த பாகிஸ்தானுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது என்றும் ஆனால் பாதுகாப்பு காரணங்களால், இந்தியா பாகிஸ்தானில் விளையாட மறுத்துவிட்டது என்றும் செய்திகள் கசிகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே