நான்கு நாள் விடுமுறை காரணமாக குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
சீசன் முடிந்த பிறகும் பிரதான அருவியான குற்றால அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்டவற்றில் தண்ணீர் கொட்டுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
இன்று முதல் நான்கு நாட்களுக்கு தொடர் விடுமுறை என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.