சென்னை: 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளரை வெற்றி பெற வைக்கும் மாவட்ட தலைவருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டசபைக்கு தேர்தல் நடக்க சில மாதங்கள் தான் இருக்கின்றன. இப்போது அதற்கான அடிப்படை வேலைகளில் அனைத்து கட்சிகளும் களம் இறங்கி உள்ளன. கூட்டணி பேச்சுகள், யார், யாருடன் கை கோர்க்க வேண்டும் என்று கணக்கிட்டு வருகின்றன.

இந் நிலையில் தேர்தலில் பாஜக வேட்பாளரை வெற்றி பெற வைக்கும் மாவட்ட தலைவருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் அறிவித்துள்ளார்.

சென்னையில் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது இதை தெரிவித்தார். அவர் மேலும் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணியே வரும் சட்டசபை தேர்தலிலும் தொடரும்.

 6 மாதங்களில் தமிழகத்தில் பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும். பாஜக கை காட்டும் கட்சிதான் தமிழகத்தில் ஆட்சியில் அமரும். பாஜகவின் வேட்பாளர்களை வெற்றி பெற செய்யும் மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும் என்று கூறினார்.

Having 20 years experience in the field of Journalism in various positions.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே