இ-பதிவு பெறுவதற்கான காரணங்களின் பட்டியலில் திருமணம் என்ற பிரிவு மீண்டும் நீக்கம்..!!

தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதை அடுத்து வரும் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப் பட்டுள்ளது. தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தேநீர் கடைகள் செயல்பட தடை, காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அத்தியாவசியக் கடைகள் செயல்படவேண்டும் போன்ற கட்டுப்பாடுடகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு வெளியேயும் பயணம் செய்ய, இ-பதிவு கட்டாயம் என்ற நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

திருமணம், நெருங்கிய உறவினர் இறப்பு, மருத்துவம் சார்ந்த தேவை, பணிகளுக்கு மட்டுமே இ பதிவு செய்யவேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இ-பதிவு இணையதள பக்கத்தில் இருந்து திருமணத்திற்கான அனுமதி மட்டும் நீக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இறப்பு, முதியோர்களுக்கு சிகிச்சைக்கு மட்டுமே தற்போது இ-பதிவு இணையதள பக்கத்தில் உள்ளது. திருமணம் என்ற பகுதி நேற்று திடீரென நீக்கப்பட்டது.

இதனால் பலரும் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் இன்று காலை மீண்டும் காரணங்கள் பட்டியலில் திருமணம் சேர்க்கப்பட்டது.

இதனையடுத்து பலரும் திருமணத்தை காரணமாக பதிவு செய்து பலரும் இ பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சில மணி நேரங்களில் மீண்டும் திருமணம் என்ற காரணம் பகுதி நீக்கப்பட்டுள்ளது.

இதனால், திருமணத்திற்காக இனி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை. இதனிடையே பலரும் போலியான திருமண அழைப்பிதழை சமர்பித்து இ பதிவு பெற்று சுற்றுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே