சபரிமலையில் முதியவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தரிசனத்திற்காக சுதர்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் தரிசனத்திற்கு சிரமப்படுவதை தடுக்கும் விதமாக ஒரு சிறப்பு வசதி செய்யப்பட வேண்டும் என்று சட்டசபைக் குழு அரசுக்கு பரிந்துரைத்தது.
இதன் அடிப்படையில் சுதர்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக தன்னார்வா தொண்டர்கள் தேர்வு செய்யப்பட்டு பம்பை, நீலிமலை, அப்பாச்சிமேடு பாதையிலும், சுவாமி ஐயப்பன் ரோட்டிலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மலை ஏற முடியாமல் சிரமப்படுபவர்களுக்கு ட்ராலி வசதித் செய்தல், தங்க வசதி செய்து கொடுத்து சிறப்பு தரிசனத்திற்கும் வழி செய்வார்கள்.