பணியை நிறைவு செய்தார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்

அயோத்தி உள்ளிட்ட பல சர்ச்சைக்‍குரிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. ரஞ்சன் கோகோய் ஓய்வு பெறவுள்ள நிலையில், நேற்று தனது இறுதி பணி நாளை நிறைவு செய்தார்.

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ பாப்டே திங்கட்கிழமை பொறுப்பேற்கிறார்.

தலைமை நீதிபதி பதவியில் இருந்து விலகும் ரஞ்சன் கோகய் நேற்று மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செய்தார்.

பின்னர் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள எஸ்.ஏ.பாப்டேவுடன் சிறிது நேரம் உரையாடினார்.

பத்திரிகைகளுக்கு ரஞ்சன் கோகய் எழுதியுள்ள 3 பக்க கடிதத்தில் நெருக்கடியான நேரங்களில் ஊடகங்கள் மிகவும் பக்குவத்துடன் செயல்படுவதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ரஞ்சன் கோகய்க்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது.

இதில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கலந்துக் கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே