நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷ் புதிய மனு

நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், தனது தூக்கு தண்டனைக்கு எதிராக புதிய மறுசீராய்வு மனு, கருணை மனு அளிக்க அனுமதிக்க வேண்டும் என முகேஷ் சிங் குறிப்பிட்டுள்ளார்.

சட்ட, அரசியல் சாசன வாய்ப்புகள் அனைத்தும் நிறைவடைந்து விட்ட நிலையில் மீண்டும் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் சனிக்கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 20 ஆம் தேதி தூக்குதண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தண்டனை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதற்காக குற்றவாளிகள் தொடர்ந்த பல்வேறு மனுக்களால் ஏற்கனவே 3 முறை தூக்கு தண்டனை தள்ளிவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே