ஓ.பன்னீர் செல்வத்திற்கு “வீரத்தமிழன்” பட்டம்

அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு, அங்குள்ள தமிழ்ச்சங்கங்கள், “பண்பின் சிகரம்”, “வீரத்தமிழன்” ஆகிய பட்டங்கள் வழங்கி கவுரவித்தன. 

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஹூஸ்டனில் உள்ள ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அங்கு தேவஸ்தானம் சார்பில் புனரமைக்கப்பட்ட திருமண மண்டபத்தின் கல்வெட்டை அவர் திறந்து வைத்தார். 

ஹூஸ்டன் தமிழ ஆய்வு இருக்கை மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புக்கள் சார்பாக நடத்தப்பட்ட விழாவில் துணை முதலமைச்சர் கலந்து கொண்ட தினம், ஓபிஎஸ் டே என அறிவிக்கப்பட்டது.

மேலும் பத்மினி ரங்கநாதன் டிரஸ்ட் சார்பில் பண்பின் சிகரம் என்ற பட்டமும், மெட்ரோபெளக்ஸ் தமிழ் சங்கம் சார்பாக வீரத்தமிழன் பட்டமும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்டன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே