பிரதமர் மோடியை தொடர்ந்து பேர் கிரில்ஸின் ‘MAN vs WILD’ நிகழ்ச்சியில் ரஜினி

பிரதமர் மோடியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தும் பேர் கிரில்சின் ’மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிஸ்கவரி சேனல் தொலைக்காட்சியில் பேர் கிரில்ஸ் தொகுத்து வழங்கும் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சி மிகப் பிரபலமானதாகும்.

PM Modi in ManVsWild

அதில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டது, அந்நிகழ்ச்சியை கூடுதலாக பிரபலமாக்கியது.

SuperStar Rajnikanth in ManVsWild

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தும் பேர் கிரில்சுடன் இணைந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான படப்பிடிப்பு பந்திப்புரா புலிகள் காப்பக வனப்பகுதியில் நடைபெற இருப்பதாகவும், அதில் 2 நாட்கள் வரை ரஜினிகாந்த் பங்கேற்பார் எனவும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே