கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாற்றில் பிரபல நடிகை.!

பிரபல விளையாட்டு வீராங்கனையான கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீப காலமாக பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வருகின்றனர். சமீபத்தில் கூட பழம்பெரும் நடிகையான சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்றார்.

இந்த நிலையில் தற்போது ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற பிரபல பளுதூக்கும் வீராங்கனையான கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க போவதாக அவரின் பிறந்தநாளை முன்னிட்டு கோனா பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்த படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாக்கவிருப்பதாகவும், இதனை சஞ்சனா ரெட்டி இயக்குவதாகவும் கூறப்படுகிறது

கர்ணம் மல்லேஸ்வரி கதாபாத்திரத்தில் நடிக்க தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத்தி சிங்கை தேர்வு செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Tags :

Karnam Malleswari| Rahul Preet Singh

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே