மாற்றுத்திறனாளி ஆசிரியர் பாடம் நடத்தும்போது கிண்டல் செய்த மாணவர்கள் நீக்கம்..!!

புதுசத்திரம் அரசு பள்ளியில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியரை கேலி செய்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட 3 மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கம்.

நாமக்கல் அருகே,புதுசத்திரம் அரசு பள்ளியில் பன்னீர் என்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஆசிரியர் வரலாற்றுப் பாடம் எடுத்து வருகிறார்.அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வழக்கம்போல் அவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது,பாடத்தை கவனிக்காமல் மாணவர்கள் சிலர் ஆசிரியர் முன் எழுந்து நின்று கேலி கிண்டலுடன் ஆட்டம் போட்டனர். பின்னர் அதை டிக்-டாக் போல எடிட் செய்து சமூகவலைத்தளங்களிலும் பதிவிட்டனர்.

இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது.

இதனையடுத்து,இது தொடர்பாக அப்பள்ளி தலைமையாசிரியரிடம் கேட்டபோது, சம்மந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து கண்டிப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில்,பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியரை கேலி செய்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட 3 மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே