திருமணமான 4 மாதத்தில் புதுமணப் பெண் உயிரிழப்பு..!!

கோவையில் திருமணமான 4 மாதத்தில் புதுமணப் பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சுந்தராபுரம் காந்தி நகரை சேர்ந்தவர் அபிநயா (27). இவருக்கும் கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், நேற்று முன்தினம் அபிநயா வழக்கம் போல் வீட்டுவேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது பின்தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அபிநயா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருமணமாகி 4 மாதங்களில் புதுப்பெண் உயிரிழந்ததால் இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே