பார்ப்பவர்களைக் குழப்பமடையச் செய்யும் ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுமியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிரிஸ்டோபர் ஃபெரி என்பவர் கடந்த திங்கள்கிழமை அவருடைய பேஸ்புக் பக்கத்தில் ஐந்து வயது சிறுமியின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்தப் படத்தைப் பார்க்கும்போது, அந்தச் சிறுமியின் கால்கள் மிகவும் மெல்லியதாக இருப்பது போலவும், சிறுமி ஒரு மாற்றுத்திறனாளி போலவும் தெரிகிறது.
ஆனால் சிறுமி கையில் பாப்கார்ன் வைத்துள்ளார். அதுதான் அந்தச் சிறுமி அப்படி தெரிவதற்கு காரணம்.
அந்தப் புகைப்படத்துக்கு கமெண்ட் பதிவிடும் பலரும் நான் முதலில் சிறுமி மாற்றுத்திறனாளி என்று நினைத்தேன். பின்னர் புகைப்படத்தை கூர்ந்து கவனித்தப் பிறகுதான் சிரிப்பு வந்தது என்று குறிப்பிட்டுள்ளனர்.
அந்தப் புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.