வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.

இலங்கையின் திரிகோணமலையிலிருந்து வங்கக் கடலில் 530 கிலோ மீட்டர் தொலைவில் புயல் சின்னம் நிலை கொண்டுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னமாக மாறும்.

இது அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னமாக மாறி, இலங்கையில் நாளை மாலை அல்லது இரவில் புரெவி புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்தடுத்து வலுவடைந்து, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக மாறியது. 

இது செவ்வாய்க்கிழமை புயலாக மாறவுள்ளது. இந்தப் புயலுக்கு மாலத்தீவு வழங்கிய ‘புரெவி’ என்ற பெயா் வைக்கப்படவுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே