சென்னை மற்றும் புறநகரில் கன மழை மதியம் வரை மழை நீடிக்கும்

புத்தாண்டை வரவேற்கும் விதமாக இன்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது.

சென்னை நுங்கம்பாக்கம் கோடம்பாக்கம் வடபழனி போரூர் கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. இதேபோல் புறநகர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர்.

அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 3 சென்டி மீட்டர் மழையும், நுங்கம்பாக்கத்தில் இரண்டு சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

கிழக்கு திசை காற்று வலுப்பெற்றுள்ளது காரணமாக சென்னை மற்றும் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை தொடரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே