கிருமி நாசினி சுரங்கங்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது. எனவே இதனை தடுக்க தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு நடைபாதை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிதர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பது பயனற்றது என்பதோடு தீங்கும் விளைவிக்கும்.
இனி எந்த இடத்திலும் கிருமிநாசினி சுரங்கம் அமைக்கவும் அதனை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.