தேமுதிக மற்றும் அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்

திருவண்ணாமலையில் அதிமுக மற்றும் தேமுதிகவில் இருந்து விலகிய 60 பேர், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் திமுகவில் நேற்று முன் தினம் இணைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட தேமுதிக பிரதிநிதி பச்சையப்பன் தலைமையில் அதிமுக இளைஞர் பாசறை செயலாளர் சீனுவாசன் உட்பட 60 பேர், அக்கட்சியில் இருந்து விலகி, முன்னாள் அமைச்சரும், திமுக வேட்பாளருமான எ.வ.வேலு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு துண்டு அணிவித்து எ.வ.வேலு வரவேற்றார்.

அப்போது, தலைமை செயற்குழு உறுப்பினர் தரன், மாவட்டப் பொருளாளர் பன்னீர்செல்வம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே