தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏற்கனவே 969 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு 1075 ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து ஏற்கனவே 10 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்.

இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் சிகிச்சை பெற்று வந்த 50 குணமடைந்து திரும்பியுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 39,041 பேர் வீட்டு கண்காணிப்பில் இருக்கின்றார்கள் என்றும் அரசு கண்காணிப்பில் 162 பேர் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்து 58,189 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 10,655 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதில் 1075 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது என்றும்; தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தனியார் பரிசோதனை மையங்களில் மக்கள் பரிசோதனை செய்து கொள்வதற்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே