நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை

காற்றாலை அமைத்து தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் கேரள நடிகை சரிதா நாயருக்கு கோவை மாவட்ட நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கேரள நடிகை சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோவையில் காற்றாலை அமைக்க நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர்.

இந்த நிறுவனத்தில் ரவி என்பவர் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

இவர்கள் மூவரும் சேர்ந்து காற்றாலை அமைத்து தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக இவர் மீது புகார் எழுந்தது.

இந்த வழக்கை விசாரித்து வந்த கோவை மாவட்ட குற்றப்பிரிவு நடுவர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.

அதில் பண மோசடியில் ஈடுபட்ட நடிகை சரிதாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி கண்ணன் உத்தரவிட்டார்.

மேலும் 10ஆயிரம் ருபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சரிதா நாயர் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த ரவி என்பவருக்கும் மூன்று ஆண்டுகால சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே