தஞ்சையில் அவமதிப்பு செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலையை சுற்றி காவல் துறையினர் கம்பி வேலி அமைத்து இருக்கிறார்கள்.
பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது சாணம் பூசி அடையாளம் தெரியாத நபர்கள் அவமதிப்பு செய்தனர்.
இதனை தொடர்ந்து வள்ளுவர் சிலை அருகில் யாரும் செல்லாத வகையில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் வள்ளுவர் சிலையை சுற்றி கம்பிவேலி அமைத்த காவல்துறையினர் 3 சிசிடிவி கேமராக்களை பொருத்தி வள்ளுவர் சிலையை கண்காணித்து வருகின்றனர்.