தமிழகத்தில் இன்று 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த, தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக பிரதமர் மோடி எடுக்கும் முடிவை தமிழக அரசு அமல்படுத்துவது என்று அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக விளக்கமளித்த அவர், இன்று புதிதாக 58 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார்.
இதனால், பாதிப்பு எண்ணிக்கை 969ஆக அதிகரித்துள்ளது.
மேலும், ஈரோட்டில் ஒரு மூதாட்டி இன்று உயிரிழந்துள்ளதால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ரேபிட் டெஸ்ட் கருவிகள் தமிழகத்தின் சார்பிலும், சென்னை மாநகராட்சி சார்பிலும் தனியாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. விரைவில் வந்து சேரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.