அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு..!

உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

நடப்பாண்டு டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து ஆலோசிக்க நாளை அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

நாளை காலை 11:30 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது. 

கூட்டத்தில் அனைத்துக்கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்க வேண்டும் என ஆணையர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே