க.அன்பழகன் மறைவிற்கு ஸ்டாலின் கண்ணீர் கவிதை

திராவிடச் சிகரம் சாய்ந்து விட்டது, சங்கப் பலகை சரிந்து விட்டது என க.அன்பழகன் மறைவுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் கவிதை எழுதியுள்ளார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அந்த இரங்கல் கவிதையில், 

திராவிடச் சிகரம் சாய்ந்துவிட்டது, சங்கப் பலகை சரிந்துவிட்டது, இனமான இமயம் உடைந்து விட்டது எனக் கூறியுள்ளார்.

எங்கள் இன்னுயிர் ஆசான் இறந்துவிட்டார்!, 
என்ன சொல்லித் தேற்றுவது? கோடிக்கணக்கான கழக குடும்பத்தினரை?; பேரறிஞர் அண்ணா குடியிருக்கும் வீடாக இருந்தவர், முத்தமிழறிஞர் கலைஞரைத் தாங்கும் நிலமாய் இருந்தவர் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அப்பா மறைந்த போது பெரியப்பா இருக்கிறார் என்று ஆறுதல் பெற்றேன் என்றும் இன்று பெரியப்பாவும் மறையும் போது என்ன சொல்லி என்னை நானே தேற்றிக் கொள்வேன் என்றும் இரங்கல் கவிதையில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே