முதலமைச்சர் பழனிசாமிக்கு ஸ்டாலின் கேள்வி

மத்திய அரசின் பொது தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான மருத்துவ இடங்கள் கிடைக்காமல் போனதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுவரை ஏன் வாய் திறக்கவில்லை என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசு விழாக்களில் சிறிதும் நாணமின்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பயன்படுத்துவதாகவும், பொது நிகழ்ச்சிகளில் மக்களிடம் பொய் கூறுவது முதலமைச்சர் பதவிக்கு அழகு இல்லை எனவும் ஸ்டாலின் சாடியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடத்தப்படும் என 2018ஆண்டு முதலமைச்சரே கூறியதாக தெரிவித்துள்ள ஸ்டாலின், தற்போது மறைமுக தேர்தலுக்கான அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், ஏன் இந்த குழப்பம், குளறுபடிமான கொள்கை மாற்றம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தடுக்க நினைப்பதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் ஒரே நேரத்தில் ஆறு மருத்துவக் கல்லூரிகளை தமிழகம் பெற்றிருப்பதாக முதலமைச்சர் கூறியதைச் சுட்டிக்காட்டிய ஸ்டாலின், மத்திய அரசின் பொது தொகுப்பில் ஓபிசி மாணவர்களுக்கான 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 5 ஆயிரத்து 530 மருத்துவ இடங்கள் கிடைக்காமல் போனதற்கு இதுவரை முதலமைச்சர் வாய் திறக்க வில்லை எனவும், இதில் புதிய மருத்துவ கல்லூரிகள் என கூறுவதால் என்ன பயன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே