அசுரன் படத்தை திரையரங்கில் கண்டுகளித்த ஸ்டாலின்

திமுக தலைவர் மு க ஸ்டாலின் தூத்துக்குடியில் உள்ள திரையரங்கில் அசுரன் படத்தை கண்டுகளித்தார்.

பரப்புரை பணிகளுக்காக தூத்துக்குடியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருக்கும் ஸ்டாலின், நேற்று நாங்குநேரி சுற்றுவட்டாரப் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார்.

இரவு பரப்புரை முடிந்து மீண்டும் தூத்துக்குடிக்கு திரும்பிய ஸ்டாலின், தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தை காண விரும்பினார்.

இதையடுத்து, அங்குள்ள பாலகிருஷ்ணா திரையரங்கிற்கு நிர்வாகிகளுடன் சென்று அசுரன் படத்தை பார்த்தார்.

இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடி சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் என அசுரன் திரைப்படத்தை பாராட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே