கூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகினாலும் கவலை இல்லை! – திமுக பொருளாளர் துரைமுருகன்

திமுக கூட்டணியில்ருந்து காங்கிரஸ் விலகினாலும், தங்களுக்கு கவலை இல்லை என்றும்; காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு வங்கியே கிடையாது என்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி தர்மத்தை மீறியதாகவும், காங்கிரஸ் கட்சிக்கு உரிய இடங்களை ஒதுக்கவில்லை என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி இணைந்து அறிக்கை வெளியிட்டனர்.

இந்த அறிக்கையின் மூலம் காங்கிரஸ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.

பின்னர் திமுகவுடன் எந்த சலசலப்பும் இல்லை என்று மீண்டும் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டார்.

இதனால் டெல்லியில் சோனிய காந்தி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் திமுக பங்கேற்வில்லை.

திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்து பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, காலம் தான் உரிய பதிலை சொல்லும் என்று சூசகமான பதிலை தெரிவித்தார்.

இந்நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடியில் பொங்கல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.

கூட்டணியில் இருந்து வெளியேறினால், தங்களுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை எனவும் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு வங்கி இல்லை எனவும் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே