சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.
சென்னையில் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில் தற்போது தொடர்ந்து சாரல் மழை பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது.
குறிப்பாக அசோக்நகர், ஈக்காட்டுதாங்கல், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் மற்றும் விமான நிலையம் அருகே உள்ள பகுதிகள் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
ஏற்கனவே இரவு நேரத்தில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகள் மற்றும் வடிகால் வசதிகள் முறையாக செயல்படுத்தாத பகுதிகளில் தண்ணீர் தேங்கிய நிலையில் தற்போது தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.