விக்ரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
தொகுதிக்கு உட்பட்ட காணை, மல்லிகை பட்டு, அன்னியூர் உள்ளிட்ட இடங்களில் திறந்த வேன் மூலமாக சென்று மக்களிடம் ஆதரவு திரட்டினார்.
அப்போது பேசிய ஸ்டாலின், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீட்டை திமுக தான் பெற்றுத்தந்தது என்று கூறினார்.
அரியூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அவர் திண்ணை பரப்புரையில் ஈடுபட்டார்.