சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதாவுக்கு நன்றி கடனாற்ற வேண்டும் என்று ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் வரும் 24 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

இதையொட்டி கோவையில் இன்று அதிமுக சார்பில் 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

கோவை பச்சாபாளையத்தில் நடந்த திருமணத்தை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் தலைமை தாங்கி நடத்தி வைத்தனர். 

123 ஜோடிகளுக்கும் அதிமுக சார்பில் 73வகை சீர்வரிசை பொருட்களை முதல்வர், துணை முதல்வர் வழங்கினர்.

இந்நிலையில் கோவையில் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய துணை ஓபிஎஸ், “ஜெயலலிதா வழியில் அடிபிறழாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வருகிறார். ஒரு கட்சி எப்படி செயல்பட வேண்டும் என மாற்றிக் காட்டியவர் ஜெயலலிதா.

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதாவுக்கு நன்றி கடனாற்ற வேண்டும்” என்றார். அத்துடன் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் அன்று அதிமுகவில் விருப்பமனு விநியோகம் செய்யப்படவுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 24 முதல் மார்ச் 5 வரை விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே