திமுக வாரிசு அரசியல் செய்கிறது – முதலமைச்சர் விமர்சனம்

விக்கிரவாண்டி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டார்.

விக்ரவாண்டி நாங்குநேரி தொகுதி களில் வரும் 23-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் முதலமைச்சர் பழனிசாமி விக்ரவாண்டியில் இருந்து தமது பரப்புரையைத் தொடங்கினார்.

விக்ரவாண்டி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து, முண்டியம்பாக்கம், ராதாபுரம், விக்கிரவாண்டி பேரூராட்சி, வி.சாத்தனூர், புதுப்பாளையம் ஆகிய இடங்களில் முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், வாரிசு அரசியலில் திமுக ஈடுபட்டிருப்பதாக விமர்சித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே