மக்களிடையே தவறான தகவல்களை சொல்வதற்காக திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு நோபல் பரிசே தரலாம் என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.
அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி தூத்துக்குடி பழைய மாநகராட்சியில் உள்ள எம்ஜிஆரின் முழு உருவ சிலைக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்கனவே சொன்னது போன்று மு க ஸ்டாலின் பாராட்டு விழா நடத்தாதது ஏன்?? என்று கேள்வி எழுப்பினார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தரம் தாழ்ந்து பேசுவதாகவும், அவரது பேச்சை மக்கள் ரசிக்கவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.