ப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஐ.என்.எஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஏற்கனவே சிபிஐயால்  கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் உள்ள சிதம்பரத்தை, அந்த முறைகேட்டில் நடைபெற்ற பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை நேற்று கைது செய்தது.

டெல்லி திகார் சிறைக்கே சென்று சிதம்பரத்தை கைது செய்வதாக கூறிய அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

அப்போது சிதம்பரத்தை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை அடுத்து, 7 நாட்கள் காவலில் வைத்து சிதம்பரத்தை விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

இதேபோல சிபிஐ வழக்கில் சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை வருகிற 24-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே